Rock Fort Times
Online News

இனி யாரும் வீட்டுக்கு வராதீங்க…* துணை சபாநாயகரின் அறிவிப்பால் துறையூர் தொகுதி மக்கள் அதிர்ச்சி..! 

திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருப்பவர் மு.ரவிசங்கர். இவருக்கு சொந்தமாக மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையத்தில் வீடு உள்ளது. இங்கு கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இவரை சந்திக்க வருவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் “என்னை சந்திக்க வீட்டிற்கு யாரும் வர வேண்டாம். சந்திக்க விரும்புபவர்கள், மண்ணச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்திலும், துறையூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் நேரில் வந்து சந்திக்கலாம்” என, அறிவிப்பு ஒன்றை  வீட்டின் முன்பு ப்ளக்ஸ் வைத்துள்ளார். இது தொகுதி மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து விபரம் அறிந்த வட்டாரத்தினரிடையே நாம் பேசிய போது., “தேர்தலில் வெற்றி பெற்று துணை சபாநாயகர் ஆகிய பிறகு ரவிசங்கர் சொந்த வீடு அமைந்துள்ள பூனாம்பாளையம் பகுதிக்கு வருவதே இல்லை. இங்கு அவரது தாயார் மற்றும் அவரது மகன் மட்டுமே இருக்கின்றனர். பெரும்பாலும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் அதேபோல துறையூரில் உள்ள வீடு ஒன்றிலுமே இவர் பெரும்பாலும் இருக்கிறார். ஆகவே இவரது சொந்த வீடு இருக்கும் பூனாம்பாளையத்திற்கு நேரில் சந்திக்க வரும் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும், துணை சபாநாயகர் இல்லாததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஆகவே தான் இது போன்ற அறிவிப்பை துணை சபாநாயகர் வெளியிட்டுள்ளார் என்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்