Rock Fort Times
Online News

த.வெ.க. கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் மா.கம்யூனிஸ்ட் பங்கேற்காது…* கே.பாலகிருஷ்ணன்…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“எந்தச் சூழலிலும் தவெக அமைச்சரவையில் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம். அன்றைய சூழ்நிலையில், ஒரு ஆட்சி அமையாமல் போய்விடக் கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவு கொடுத்தோம். மற்றபடி அமைச்சரவையில் சேர மாட்டோம். நாளை தவெக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுகின்றனர். நாங்கள் அந்தக் கூட்டணியில் இல்லை. எனவே அந்தக் கூட்டணி கூட்டத்துக்கு போக மாட்டோம். இதனை ஏற்கெனவே சொல்லி விட்டோம். கடந்தமுறை நடந்த கூட்டத்துக்கு நாங்கள் போகவில்லை. இப்போதும் போக மாட்டோம். தற்போது நாங்கள் தவெக, திமுக என எந்தக் கூட்டணியிலும் இல்லை. இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். அடுத்த மாதம் ஒரு பெரிய பேரணி நடத்துகிறோம். தேர்தல் வரும் போது அப்போதைய சூழல் குறித்து முடிவெடுப்போம். இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சியில் விவாதித்து முடிவெடுப்போம்” என்றார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்