Rock Fort Times
Online News

கேரளாவில் சாலை விபத்தில் தமிழக மாணவர்கள் 8 பேர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஒரு காரில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று(04-09-2026) நள்ளிரவு அவர்கள் கேரள மாநிலம், திருச்சூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த யுவ சஞ்சித், சூர்யா, மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஸ்வா, சந்தோஷ், ஜோஸ்வா உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்