திருச்சி கிழக்கு மாநகர திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் செந்தில் இல்ல திருமண விழா…* முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து..!
திருச்சி கிழக்கு மாநகர திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் மேலக்கல்கண்டார் கோட்டை செந்தில் – கவிதா தம்பதியரின் மகன் எஸ்.விக்னேஷ், மேலக்கல்கண்டார்கோட்டை என்.ரமேஷ் – ஜெயந்தி இணையரின் மகள் ஆர்.வர்ஷா ஆகியோருக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம், காட்டூர் பிரகாஷ் மஹாலில் இன்று (ஆக.30) விமரிசையாக நடைபெற்றது. முன்னாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில் திமுக மாநிலங்களவை எம்.பி. கவிஞர் சல்மா, பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட அமைப்பாளர் எஸ்.வி.ராஜ்குமார்,முன்னாள் திருவெறும்பூர் எம்.எல்.ஏ கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், பி.எம்.சபியுல்லா, கவுன்சிலர் என்.செந்தில், பி.சேகர் அருண், என்.கோவிந்தராஜ், அ.த.த.செங்குட்டுவன், ரா.மூக்கன், வ.லீலாவேலு, இரா.குணசேகரன், ப.திவ்யா, பி.ஏ.நூர்கான், கொட்டப்பட்டு ரமேஷ், ஆறு.சந்திரமோகன், பொன்.செல்லையா, சரோஜினி, தமிழ்செல்வம், கே.சி.பழனிச்சாமி, ப.ராஜேஸ்வரன், உ.மணிமேகலை எம்.மாரியப்பன், கே.கார்த்தி, பகுதி செயலாளர்கள் ஓ.நீலமேகம், டி.பி.எஸ்.எஸ். ராஜ்முகமது, ஆர்.மோகன், ஜி.மணிவேல், ஏ.எம்.ஜி.விஜய்குமார், ஆர்.ஜி.பாபு, எஸ்.சிவகுமார், வட்டச்செயலாளர் சிவக்தி கார்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், மாநகர, பகுதி, வார்டு, கிளைக்கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள், நண்பர்கள் உறவினர்கள், தொழிலதிபர்கள், உள்ளிட்ட பலர் வருகைதந்து மணமக்களை வாழ்த்தினர்.

Comments are closed.