திருச்சி கிழக்கு மாவட்ட திமுகவில் 350 பேருக்கு மாவட்ட நிர்வாகிகளாகும் வாய்ப்பு…* கட்சித் தலைமையால் தேடிவந்த ‘ஜாக்பாட்’…
தமிழகத்தில் அமைப்பு ரீதியாக திராவிட முன்னேற்ற கழகத்தில் 77 கட்சி மாவட்டங்கள் இருந்தன. தற்போது அது 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் ஏற்கனவே இருந்த, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்தி ஆகிய மூன்று கட்சி மாவட்டங்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி கிழக்கு மாவட்டத்தில் லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளும், திருச்சி வடக்கில் முசிறி மற்றும் துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், திருச்சி தெற்கிற்கு திருவெறும்பூர், மணப்பாறையும், திருச்சி மத்திய மாவட்ட திமுகவில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருச்சி கிழக்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர், துணை செயலாளர், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் என மொத்தமாக 300லிருந்து 350 பேர் வரை புதிதாக மாவட்ட நிர்வாகிகளாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில்.,
மாவட்டக் கழக அமைப்பை வழிநடத்த தலைமைப் பொறுப்பில் முக்கிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாவட்டச் செயலாளர் – 1 நபர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் – 5 நபர்கள் (பொதுவாகப் பொதுப்பிரிவு, ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் என பிரிக்கப்படும்), மாவட்டப் பொருளாளர் – 1 நபர்,
- தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் – 3 நபர்கள் (மாவட்டத்தின் தொகுதி எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடலாம்),
- பொதுக்குழு உறுப்பினர்கள் (தோராயமாக 4 – 8 பேர்)ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 2 பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்படுவார்கள். 2 அல்லது 3 தொகுதிகள் கொண்ட ஒரு மாவட்டத்திற்கு 4 முதல் 6 பொதுக்குழு உறுப்பினர்கள் வரை பதவி பெற முடியும்.
- மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் (தோராயமாக 30 – 40 பேர்)மாவட்டச் செயலாளரால் நியமிக்கப்படும் மாவட்ட அளவிலான இந்தச் செயற்குழுவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
- சார்பு அணிகளின் நிர்வாகிகள் (தோராயமாக 250 – 300 பேர்)திமுகவில் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ சார்பு அணிகள் செயல்படுகின்றன.ஒவ்வொரு சார்பு அணிக்கும் மாவட்ட அளவில் பின்வரும் பதவிகள் வழங்கப்படும். அமைப்பாளர் – 1 நபர், துணை அமைப்பாளர்கள் – 3 முதல் 5 நபர்கள் வரை தேர்ந்தெடுக்கப்படலாம்.
மொத்தமாக பார்த்தால் திருச்சி கிழக்கு மாவட்ட திமுகவில் 350 புதிய நிர்வாகிகள் மாவட்ட பொறுப்புகளுக்கு வர முடியும்” என தெரிவித்தார்.

Comments are closed.