நேபாளத்தில் ‘போதே கோஷி’ ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி…* 57 தமிழர்கள் சிக்கித் தவிப்பு..!
திபெத் எல்லைக்கு அருகே அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் கிராமங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் சேதமடைந்தன. இதில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகளை நேபாள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளையில் 26 நேபாளக் காவல் துறையினர் மற்றும் 7 ஆயுதப் படைப் பிரிவினர் உட்பட 33 பாதுகாப்புப் படையினர் காணாமல் போயுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
57 தமிழர்கள் சிக்கி தவிப்பு,
தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூரை சேர்ந்த 57 பேர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் நேபாளம் பயணம் சென்றதாகவும் அவர்கள் அங்கு. வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 23 பேர் மீட்கப்பட்டு ராணுவ முகாமில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.