வடகிழக்கு பருவமழை தொடங்கினாலே சென்னை மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அச்சம் தான், அளவுக்கு அதிகமான மழையின் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை வெள்ளத்தில் மூழ்கி விடும். எனவே மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் முன்னெடுத்துள்ளார். அதன்படி, முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார்.
- மண்டலம் 1 திருவொற்றியூர் – கே. பாலசுப்ரமணியம் ஐஏஎஸ்
- மண்டலம் 2 மணலி – பி. குமரவேல் பாண்டியன், ஐஏஎஸ்
- மண்டலம் 3 மாதவரம் – எஸ். அருண்ராஜ், ஐஏஎஸ்
- மண்டலம் 4 தண்டையார்பேட்டை – ஆர். கண்ணன், ஐஏஎஸ்
- மண்டலம் 5 ராயபுரம் – ஆஷா அஜித்,
- மண்டலம் 6 திரு.வி.க. நகர் – பி. கணேசன், ஐஏஎஸ்
- மண்டலம் 7 அம்பத்தூர் – கே. விவேகானந்தன், ஐஏஎஸ்
- மண்டலம் 8 அண்ணாநகர் – பி. காயத்ரி கிருஷ்ணன், ஐஏஎஸ்
- மண்டலம் 9 தேனாம்பேட்டை – டி. கிறிஸ்துராஜ், ஐஏஎஸ்
- மண்டலம் 10 கோடம்பாக்கம் – எஸ். கோபால சுந்தர ராஜ், ஐஏஎஸ்
- மண்டலம் 11 வளசரவாக்கம் – டாக்டர் ஜெ. விஜயா ராணி, ஐஏஎஸ்
- மண்டலம் 12 ஆலந்தூர் – வாகே சங்கெத் பால்வந்த், ஐஏஎஸ்
- மண்டலம் 13 அடையாறு – டாக்டர் கே. செந்தில் ராஜ் ஐஏஎஸ்
- மண்டலம் 14 பெருங்குடி – மகேஸ்வரி ரவிக்குமார், ஐஏஎஸ்
- மண்டலம் 15 சோழிங்கநல்லூர் -டி. பாஸ்கர பாண்டியன், ஐஏஎஸ்
இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களுக்கு நேரடியாகச் சென்று, மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிதல், மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலை, மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உரிய பணியாளர்கள் மற்றும் பொருட்களை முன்கூட்டியே நிலைநிறுத்துதல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.