6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் செங்கோட்டையன் காரசார விவாதம்…!
தமிழக சட்ட பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (25-08-2026) திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் பேசுகையில், முதல்வர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் 1 தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் 6 உறுப்பினர்கள் இடங்கள் காலியாக இருக்கிறது. 6 உறுப்பினர்கள் பதவியேற்ற 1 மாதத்திலேயே தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். என்ன காரணம் என்று முழுமையாக வெட்ட வெளிச்சமாக யாருக்கும் தெரியவில்லை. 6 தொகுதிகளுடைய மக்களின் குரல் இந்த அவையில் முடக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குரல் கொடுப்பதற்கு ஆள் இல்லை. மக்கள் நம்பிக்கையோடு அந்த உறுப்பினர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து போயிருக்கிறது” என்று கூறிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “அவர்களது விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் இல்லை.. எனவே இந்த விவாதத்திற்குள் போகாமல் மானியக் கோரிக்கையில் பேசுங்கள்” என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அமைச்சர்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர்களாக முதல்வர் நியமித்திருக்கிறார். அந்த 6 தொகுதிகளில் உறுப்பினர்கள் இல்லையென்றாலும் பொறுப்பு அமைச்சர்கள் அந்த தொகுதிகளின் பிரச்சனைகளை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்று கூறினார்.
இதையடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 6 உறுப்பினர்கள் ஒரு கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ளாமல் பதவியை ராஜானிமா செய்துவிட்டார்கள் என்று எங்களுடைய எம்.எல்.ஏ சொன்னார். யாரையும் அவர் குற்றம் சாட்டவில்லை” என்று கூறினார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன், “6 தொகுதிகள் மக்கள் பிரச்சனைகளை மனுக்களாக பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார். அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு நாளிலேயே ஒன்றும் நடக்காது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்தால் தான், அந்த தொகுதி மக்களை பார்த்து அவர்களுடைய பிரச்சனைகளை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருவார். பொறுப்பு அமைச்சர் ஒரு நாள் தான் போவார். அவரால் அந்த தொகுதியினுடைய மக்களின் பிரச்சனைகளை முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது” என்று கூறினார். மீண்டும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “விரைவாக தேர்தல் நடக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணமும். அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூற அதற்கு எடப்பாடி பழனிசாமி, “இந்த விவாதம் வேற மாதிரி போகுது” என்று கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அனைவரையும் அமருமாறு கோரிக்கை வைத்தார். அதன் பின்னர், அவையில் அமைதி நிலவியது.

Comments are closed.