Rock Fort Times
Online News

130 புதிய ஏ.சி. பேருந்துகள்: தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்…!

சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 130 புதிய தாழ்தள குளிர்சாதன (AC) மின்சாரப் பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று(25-08-2026) தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பச்சைக்கொடி அசைத்து இந்த புதிய மின்சாரப் பேருந்து சேவைகளை அவர் தொடங்கி வைத்தார்.

நகரின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், பயணிகளுக்குப் நவீன மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கவும் இந்த மின்சாரப் பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன. படிப்படியாக தமிழகம் முழுவதும் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்