Rock Fort Times
Online News

திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புதிய உதவி மையம் தொடக்கம்…!* பொதுமக்கள் பயன்பெற அழைப்பு !

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் உத்தரவின்படி, சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புதிய ‘சைபர் உதவி மையம்’ அமைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளித்தவர்களின் தொலைபேசிக்கு பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்ற குறுஞ்செய்தி வந்திருந்தால், அவர்கள் எம்.ஆர்.எம். போர்ட்டல் மூலமாகத் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற வழிவகை செய்வது இந்த உதவி மையத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்களின் வங்கிக்
கணக்குகள் முடக்கப்பட்டிருந்தாலோ அல்லது பணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலோ அதை நிவர்த்தி செய்ய இந்த உதவி மையத்தை பொதுமக்கள் அணுகலாம். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள போலீசார் அறிவுறுத்தி
உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்