Rock Fort Times
Online News

தி.மு.க-அ.தி.மு.க ஒன்றாக இருக்கிறோம் என்பது உண்மை இல்லை” – எ.வ.வேலு…!

சட்டமன்றத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்தார். திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்றும், திமுக ஒரு தனிக்கட்சி, அதிமுக வேறு கட்சி என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதிமுகவினர் கடுமையாக உழைத்து மக்களின் ஆதரவுடன் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பில் உள்ள நிலையில், அதிமுகவும், திமுகவும் இணைந்து விட்டதாகக் கூறப்படுவது தங்களை மிகவும் காயப்படுத்துவதாக சட்டமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பின்னர் வேறு கட்சிக்கு சென்றிருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்