Rock Fort Times
Online News

பழனி கோவில் நில மோசடி வழக்கில் சார் பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் ‘சஸ்பெண்ட்’…!

திண்​டுக்​கல் மாவட்​டம், பழநி அடி​வாரத்​தில் பூங்கா சாலையில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்குச் சொந்​த​மான 1.40 ஏக்​கர் நிலத்தை ஜூலை 6-ம் தேதி சார்​பதி​வாளர் (பொறுப்​பு) ஜஸ்​டின் மணி​கண்​டன் தனிநபர்களுக்கு பத்​திரப்​ப​திவு செய்து கொடுத்​தார். ரூ.100 கோடி மதிப்​பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடி​யாக பதிவு செய்​யப்​பட்ட சம்​பவம் குறித்து சிபி சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவ​காரம் தொடர்​பாக சார்​ப​திவாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், மாவட்​டப் பதி​வாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே ‘சஸ்பெண்ட்’ செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பழனி சார் பதிவாளர் பாலச்சந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி ஆகிய இரண்டு பேர் இன்று( ஆகஸ்ட் 3) சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை பத்திர பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்