விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…!
விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க முயற்சிக்காத தவெக அரசை கண்டித்தும் இன்று(03-08-2026) தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பயிர் கடன் தள்ளுபடி என்னாச்சு, நகை கடன் தள்ளுபடி என்னாச்சு, மகளிருக்கு 2500 ரூபாய் என்னாச்சு, விவசாய நிவாரணம் என்னாச்சு, ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர் என்னாச்சு ? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

Comments are closed.