Rock Fort Times
Online News

சிவகங்கை அருகே மறைந்த குதிரைப்பந்தய வீரரின் குடும்பத்தினருக்கு ஸ்ரீரங்கம் முன்னாள் எம்.எல்.ஏ பழனியாண்டி ரூ.1 லட்சம் நிதியுதவி..!

சிவகங்கை மாவட்டம், அம்பேத்கர் நகர்,அமராவதி புதூரை சேர்ந்த இளம் வயது குதிரைப் பந்தய வீரரான கணேசன் என்ற சிறுவன், சமீபத்தில் நடைபெற்ற சாலை விபத்தின் போது மரணம் அடைந்தார். சிவகங்கை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் குதிரை பந்தயகளில் கலந்து கொண்டு சீறிப்பாயும் குதிரைகளை லாபமாக கையாண்டு பல பந்தயங்களில் அவர் பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில், மறைந்த கணேசனின் குடும்பத்தினரை இன்று( ஆகஸ்டு 1) நேரில் சந்தித்த ஸ்ரீரங்கம் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான எம்.பழனியாண்டி தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரமுகர்களான பி.ஆர். சிங்காரம், ராஜவேல், மலைப்பட்டி சந்திரன், கோல்டு கண்ணதாசன், மணப்பாறை பழனி, ஐடி விங் லட்சுமணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்