திருச்சி தீத்தடுப்பு குழுவில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றியவர் எம்.பிரான்சிஸ். பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய இவர் நேற்று (31-07-2026) பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா திருச்சி, சுப்பிரமணியபுரம் திருமாங்கல்யம் திருமண மண்டபத்தில் நேற்று( ஜூலை 31) சிறப்பாக நடைபெற்றது. விழாவில், திருச்சி மாவட்ட துணை இயக்குனர் க. முரளி, மாவட்ட அலுவலர் செ.வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரான்சிஸ்-ன் உயர்ந்த பண்புகளையும், பணிக்காலத்தின் போது அவர் சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் அன்பாக நடந்து கொண்ட விதம் குறித்தும் எடுத்துக் கூறினர். சிறப்பு அழைப்பாளர்களாக பணி ஓய்வு பெற்ற மாவட்ட அலுவலர் சையத் முகமது ஷா மற்றும் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி, எடத்தெரு பழைய கோயில் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியை சுந்தர், ஜேசுதாஸ், ரூத் டூனாமிஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பணி ஓய்வு பெற்ற எம்.பிரான்சிஸ் 09- 09-1996ம் ஆண்டு கரூரில் தீயணைப்பு துறையில் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியதுடன் திருச்சி தீத்தடுப்பு குழுவில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அரசு பணியில் இருந்தோ அல்லது தனியார் கம்பெனியில் இருந்தோ ஒருவர் ஓய்வு பெறுகிறார் என்றால் அவரது பணி ஓய்வு பாராட்டு விழா வெறும் சம்பிரதாயப்படி
நடந்து முடிந்து விடும் .ஆனால் இவரது பணி ஓய்வு பாராட்டு விழாவில் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மட்டுமல்லாது தனது பள்ளி, கல்லூரி நண்பர்கள், உற்றார், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் மண்டபமே நிரம்பி வழிந்தது. அவர்கள் அத்தனை பேரையும் ஓய்வு பெற்ற அலுவலர் பிரான்சிஸ் வரவேற்ற விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவ்வளவு பெரும் கூட்டம் கூடுவதற்கு அவர் தனது பணிக் காலத்தில் சிறப்பாக பணியாற்றியதோடு நல்ல மனிதராகவும் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த நிகழ்ச்சி திகழ்ந்தது.

Comments are closed.