முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5ம் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம் பெறும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதற்கு அடுத்த நாள் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற வேளாண் துறை அமைச்சர் வினோத், அங்கு வேளாண் பட்ஜெட் நகல் ஆவணங்களை வைத்து சாமி தரிசனம் செய்தார்.

Comments are closed.