Rock Fort Times
Online News

சிறப்பாக பணியாற்றிய 665 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்..!

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பதக்க பட்டியலுக்கு காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், காவலர்கள் என 665 நபர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தனர். முதல்-அமைச்சர் பதக்க பெயர் பட்டியல் மட்டுமின்றி ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. அவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா சென்னை, எழும்பூர்
ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று(31-07-2026) நடைபெற்றது. இதில் ஐ.பி. எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத் தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதல்- அமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வரவேற்று பேசினார். இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்