திருச்சி, பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று (28-07-2026) தொடங்கின. ஜூலை 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் நாளான இன்று பள்ளி தாளாளர் அருட்பணி தீபன் குழந்தை ராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தார். வட்டார அளவில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா, போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியை அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி இயக்குனர் ராபின்சன் ஹென்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பால் மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.