கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை, பெருங்களத்தூரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக “அறப்போர் இயக்கம்” சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கத்தின் மகன்களின் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 21ம் தேதி வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில் வைத்திலிங்கம் மீது பதியப்பட்ட இந்த வழக்கு பிப்ரவரி மாதத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையைத்
மீண்டும் தொடங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது. இதற்கான உத்தரவை அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில்
மேல் விசாரணை நடத்தச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதோடு விசாரணையை முடித்து 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.