மதுரை, கோவையில் மெட்ரோ உருவாக்கப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசின் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், கோவை மெட்ரோ ரயில் நிராகரிப்பு தொடர்பான கேள்விக்கு, முதல்வரை பொறுத்தவரை கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ வேண்டும் என்பது தான். இது குறித்து பிரதமரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். நீட் தேர்வு போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அது ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உணர்வு. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. நீட் தேர்வை பொருத்தவரை எங்கள் கட்சியின், முதல்வரின் கொள்கை முடிவு அது தான். அந்த முடிவில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஆட்சியை சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த உணர்வுகளை பிரதமரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பாக உள்ளது என்பதையும் பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார் என்றார். ‘மேகதாது’ விவகாரத்தில் தவெக நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு மேகதாது அணையை பொருத்தவரை ஒரு செங்கலை கூட அவர்கள் எடுத்து வைக்கக் கூடாது அதனை அனுமதிக்க மாட்டேன் என்பது கொள்கை முடிவு என்றார். தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு பட்ஜெட் என்பது சீக்ரெட். பட்ஜெட்க்கு பிறகு கேள்வி கேளுங்கள் என்றார்.

Comments are closed.