தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று உள்ளவர் மரிய வில்சன். இவர் தனது முதல் பட்ஜெட்டை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடிக்கு வருகை தந்த அவர், செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். பட்ஜெட் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 6 மாதங்களில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே என்கிற கேள்விக்கு, அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாகவும், அவருக்கு இன்னும் கள யதார்த்தம் (ரியாலிட்டி) புரியவில்லை. மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை கொடுக்க அவருக்கும், திமுகவிற்கும் தெரியவில்லை என்று பதில் அளித்தார்.

Comments are closed.