அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்றன. லீக், நாக்- அவுட், கால் இறுதி, அரை இறுதி சுற்றுகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதன் இறுதிப் போட்டியில் கடந்த முறை சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதன் இறுதிப்போட்டி, நாளை (ஜூலை 19) நியூ ஜெர்சியில் உள்ள 82,500 இருக்கைகள் கொண்ட மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கான டிக்கெட் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இறுதிப்போட்டிக்கான உயர்நிலை டிக்கெட்டுகள் சுமார் 10,990 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சத்துக்கும் மேல்) விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ரசிகர்களின் தேவைக்கு ஏற்ப விலை மாறும் Dynamic Pricing முறையும் பின்பற்றப்படுவதால், சில டிக்கெட்டுகளின் விலை பல மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. சில பிரீமியம் இருக்கைகள் பல லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகின்றன. உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற போட்டி போட்டி போடுவதால், உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகவும் விலை உயர்ந்த இறுதிப்போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

Comments are closed.