இந்தியாவில் தாய்ப்பால் ஊட்டும் நடைமுறைகள் குறித்த நேரடி மற்றும் இணையவழி மாநாடு திருச்சி, தென்னூர் பகுதியில் உள்ள ஆக்ஸினா லைகன் ஹோட்டலில் நாளை (19-07-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 8-30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பிரசவ கால மருந்துகளின் தாக்கம் மற்றும் தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள சிரமங்களை சமாளிக்கும் வழிகள், ஆக்ஸிடோசின் ஹார்மோனை இயற்கையாகச் சுரக்கச் செய்வதற்கான முறைகள், சட்டரீதியான விதிவிலக்குகள் மற்றும் நெறிமுறைகள், இந்தியாவின் IMS சட்டத்தின் கீழ் வரும் உபகரணங்கள், மருத்துவத் தேவையின் அடிப்படையில் ஃபார்முலா பால் வழங்குவதற்கான அளவுகோல்கள், நேரடி தாய்ப்பால் ஊட்டுதலுக்கு மாறுதல், மருந்துகள் உட்கொள்ளும் காலத்தில் தாய்ப்பால் ஊட்டுதல், தாய்ப்பால் மற்றும் மருந்துகள் குறித்த இணையவழி செயலிகள் (Apps) மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தாய்ப்பால் பற்றுதல் மற்றும் நிலைகள், குழந்தையின் எடை அதிகரிப்பில் ஏற்படும் மாற்றங்கள்,
பாட்டில்களின் வகைகள், பயன்பாட்டிற்கான சட்ட மற்றும் நெறிமுறை வழிகாட்டுதல்கள், சமூக அளவில் தாய்ப்பால் தானம் மற்றும் அதைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் நேரடியாக கலந்து கொள்ள தனிநபர் ஒருவருக்கு ரூ.1000, 10 பேர் கொண்ட குழுவிற்கு தலா ரூ.800, இணையவழியில் பங்கேற்கும் தனிநபர் ஒருவருக்கு ரூ.1500, 10 பேர் கொண்ட குழு ஒன்றுக்கு தலா ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல் தேவைப்படுவோர் 75501 96505 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி, உறையூர் விவேகானந்தா நகரில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மெடிக்கல் சென்டரில் மட்டுமே தாய்ப்பால் புகட்டுவதற்கு உகந்த மருத்துவமனைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.