திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலுருந்து மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை
மின் நிலையத்தில் 18.07.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜநகர் பழையது, ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகர் , சுப்ரமணிய நகர் புதியது,
வீ.என் .நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, எடமலைப்பட்டி புதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் இபி காலனி, அரியமங்கலம், மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபீஸ், நாகம்மை வீதி, பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்த நகர், எல்.ஐ.சி காலனி புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி முத்து நகர், கே.கே.நகர், அம்மா மண்டபம், ஏ ஐ பி இ ஏ நகர், பாலாஜி அவன்யு, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 19.07.2026 ஒரு நாள் இருக்காது. 20ம் தேதி அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.