Rock Fort Times
Online News

தமிழக தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு..!

தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதைத் தொடர்ந்து, அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம், முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றி, 1990-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.  அதிகாரியான சாய்குமாரை தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமித்தது. மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ள சாய்குமார், தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்ததால், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, சாய்குமாரின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு 2027 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்