Rock Fort Times
Online News

தமிழகத்தில் திருச்சி உட்பட 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை ‘அலெர்ட்’..!

தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சில பகுதிகளில் 2 முதல் 4 டிகிரி டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும்( ஜூலை 15) நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று மற்றும் நாளை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்