தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ்” பெண்களுக்கான விழிப்புணர்வு ஓட்டம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று(11-07-2026) காலை நடைபெற்றது. இரண்டு சுற்றுகள் என 6 கிலோமீட்டர் வரையிலான இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில், பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினார்கள். இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணைஆட்சியர் அதியமான், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் , முதல் 3 இடங்களை
பிடித்த வீராங்கனைகளுக்கு தலா ரூ 5000, 3000, 2000 மற்றும் அடுத்து 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. வழக்கமாக மாரத்தான் ஓட்டம் எனப்படும் 5 கிமீ ஓட்டத்தில்கூட இரண்டு இடங்களில் வீராங்கனைகள் நலனுக்காக தண்ணீர் வைக்கப்படுவது வழக்கம். ஆனால்,
6 கிலோமீட்டர் தூரம்வரை ஓட்டம் நடத்திவிட்டு, எந்தஒரு இடத்திலும் வீராங்கனைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் மகளிர் மிகுந்த சோர்வடைந்தனர். பலர் 2 சுற்றுகளை நிறைவுசெய்யாமல் பாதியிலேயே ஓட்டத்தை கைவிட்டு திரும்பிய அவலநிலையும் ஏற்பட்டது.

Comments are closed.