Rock Fort Times
Online News

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: கைது செய்யப்பட்ட திருச்சி நரேஷ் வீட்டில் கத்தை, கத்தையாக ரூ.13 லட்சம் சிக்கியது…!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் என்.இளையராஜா அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில், திமுக தரப்பைச் சேர்ந்த சிலர் தன்னை அணுகி த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயமுத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட திருச்சியில் உள்ள நரேஷ் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்