Rock Fort Times
Online News

ஹெல்த் வாக்கிங் திட்டம் விரைவில் அறிமுகம் -அமைச்சா் மா.சுப்பிரமணியம்

      இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கால் பதிக்க திட்டம் உள்ளதாகவும்,தமிழகம் முழுவதும் ஹெல்த் வாக்கிங் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அமைச்சா் மா.சுப்பிரமணியம் மருத்துவ மாநாட்டில் தெரிவித்துள்ளார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் who இருதய ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா கலந்து கொண்டு காணொளி காட்சி மூலம் கருத்தரங்கை துவக்கி வைத்தனா். இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோவை மாவட்டத்தில் வருகின்ற பட்ஜெட்டின் போது மருத்துவத்துறை சார்பாக செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து நாளை மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் தான் 15 சதவீத இருதய நிபுணர்கள் உள்ளனர்.

 

தமிழ்நாட்டில் 1960 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இருதய சிகிச்சை செய்து வந்துள்ளோம். கலைஞரின் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இதுவரை 750 இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2008ற்க்கு பின்னால் இருதய அறுவை சிகிச்சையில் தமிழிகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் தமிழகம் தான் முன்னோடியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நோய் தொற்று காலத்திற்க்கு பிறகு இளம் வயதினர் அதிகளவில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. மருத்துவர்கள் இது குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழக அரசின் வேண்டுகோள். இந்தியா முழுவதும் தடம் பதிக்கும் திட்டம் என்னிடம் உள்ளது. 25 ஆண்டு காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நான் தொடர்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் பல்வேறு மரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். ஜப்பான் சென்றபோது அங்கு ஹெல்த் வாக்கிங் என்ற பெயரில் அனைவரும் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோன்ற நடைப்பயிற்சியை தமிழகம் முழுவதும் கொண்டுவர முதலமைச்சருடன் ஆலோசனை செய்த பிறகு அதனை தமிழக முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளோம். இன்றைய இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மராத்தான் நடத்தப்பட வேண்டும்,மராத்தான் அறிமுகம் இல்லாத மாநிலங்களிலும் மாரத்தான் போட்டிகளை நடத்தி தடம் பதிக்க வேண்டும் என கூறினாா்.

 

 

 

 

 

 

 

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்