இலங்கையின் மேற்கு கடற்கரை நீர்கொழும்பில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் . இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, சிறையில் உள்ள கைதிகளின் இரு தரப்பினரிடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்களை சிறைத் துறையினர் சமரசப்படுத்தினர். இந்தநிலையில் இன்று (ஜூலை 6) அவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், இதுவரை 19 முதல் 25 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் சிறை அதிகாரிகள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.