Rock Fort Times
Online News

திருச்சி – காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்…!

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாகவும், சில ரெயில்கள் புறப்படும் இடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி- காரைக்கால் டெமு ரெயில் (எண் 76820) இன்று (ஜூலை 3) முதல் வருகிற 7-ந்தேதி வரை (5-ந்தேதி தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. மறுமார்க்கத்தில் ஜூலை 3ம் தேதி முதல் வருகிற 7-ந்தேதி வரை (5-ந்தேதி தவிர) காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் (எண் 76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது. மேலும், இன்று ஜூலை 3 முதல் வருகிற 7-ந்தேதி வரை (5-ந்தேதி தவிர) காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண் 56817) தகுந்த இடங்களில் 20 நிமிடங்கள் நின்று தாமதமாக செல்லும். அதேபோல் சென்னை-குருவாயூர் ரெயில் (எண் 16127) இன்றும், வருகிற 10-ந்தேதியும் தகுந்த இடங்களில் 1 மணி நேரம் 20 நிமிடமும், வருகிற 5- ந்தேதி மற்றும் 7-ந்தேதி தகுந்த இடங்களில் 1 மணி நேரம் 50 நிமிடமும் நின்று தாமதமாக செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்