Rock Fort Times
Online News

முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் விஜய் பிறந்தநாளையொட்டி அன்னதானம்- நலத்திட்ட உதவிகள்… * துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார்!

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி திருச்சி, பாலக்கரை ரவுண்டானா அருகில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா ஏற்பாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு சேலை, அரிசி, மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் , அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே‌.ராஜா தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் எம்.செந்தில் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில்
வி.எஸ்.ரியல் எஸ்டேட் அதிபர் நந்தகுமார், அக்பர் அலி, சரண்ராஜ், மணப்பாறை நடேசன், பெரிய மிளகு பாறை சுப்பிரமணி, சமயபுரம் சதீஷ்குமார், அஸ்வின், கோகுல், ஞானவேல், ஜீவா, கார்த்திக், நடராஜ், மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார், தனசேகர், ஹரிஹரன், உறையூர் மூர்த்தி, தினேஷ், தாஜுதீன், லால்குடி கலைவாணன், லோகு, விஜய், சசிரேகா,ரேணுகாதேவி, புத்தூர் பாபு, பெல் பரத், ராஜ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்