பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். 73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று(27-06-2026) உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. கே.பாக்யராஜ், 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். இவரின் முழுப் பெயர் கிருஷ்ணசாமி பாக்யராஜ். ஆரம்பத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும். கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் வெற்றி பெற்றார். நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர். இவரது திரைக்கதைகளில் எதிர்பாராத திருப்பங்களும் இயல்பான உரையாடல்களும் முக்கிய அம்சங்களாகும். பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார். சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும், வசன
கர்த்தாவாகவும் பாராட்டப்பட்டுள்ளார். அவரது இறப்பு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு நடிகர்கள், இயக்குனர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது குரு பாரதிராஜா அண்மையில் தான் காலமானார். அவர் இறந்த 17 நாட்களில் பாக்யராஜ் இறந்தது தமிழ் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Comments are closed.