தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அவரது தோல்வி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எப்படியாவது கழகத் தலைவரை சட்டமன்றத்திற்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதி முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி. ஆகவே, அந்த தொகுதியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நின்றால் வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்குமா என ஆராயப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்த மு.க.ஸ்டாலின், காரில் வீடு திரும்பும்போது. நிருபர்கள் அவரிடம், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவிக்காத மு.க.ஸ்டாலின், “இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

Comments are closed.