Rock Fort Times
Online News

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் ரத்து: ரூ.15 கோடியை மிச்சப்படுத்திய அறநிலையத்துறை..!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்- அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ் உள்ளார். அவர்
அமைச்சராக பொறுப்பேற்றது முதல் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கோவில்களில் பூஜை பொருட்களுக்கான விலை பட்டியலை பக்தர்கள் அறியும் வண்ணம் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு பக்தர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார். அப்போது அந்தக் கோவிலுக்கு மாதத்திற்கு 500 பக்தர்கள் மட்டுமே வந்து செல்வது தெரியவந்தது. ஆனால் அந்த கோவிலின் அருகே ரூ. 15 கோடி திட்ட மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அமைச்சர் மாதத்திற்கு 500 பக்தர்கள் வருகை தரும் இந்த கோவிலுக்கு 15
கோடியில் கார் பார்க்கிங் எதற்கு என்று அந்த திட்டம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த திட்டம் குறித்து நேற்று சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் குறைந்த பக்தர்களே வருகை தரும் இந்த கோவிலுக்கு ரூ.15 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் தேவையற்றது என்று முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை அந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 15 கோடி மிச்சமாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்