Rock Fort Times
Online News

த.வெ.க.வில் இணைந்தார், திருச்சி மாநகர அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார்…! 

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளராக இருந்தவர் ஆர்.எட்வின் ஜெயக்குமார். இவர் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்துக் கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். எட்வின் ஜெயக்குமார். இவர் கடந்த 2006 – 11 கால திமுக அரசில் திருச்சி மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞராக பொறுப்பு வகித்தவர். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகனான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழக்கு ஒன்றில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது, அவருக்கான வழக்கறிஞராக பணியாற்றி அவர் சிறையிலிருந்து வெளிவர முக்கியமான காரணியாக இருந்தார். அதிலிருந்து கட்சித்தலைமைக்கு நெருக்கமான ஒருவராக அறியப்பட்டார். பிறகு, திமுக மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் கட்சிப் பணியாற்றிய எட்வின் ஜெயக்குமார், கட்சி நிர்வாகிகள் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அனைவரது சுக, துக்கங்களிலும் பங்கெடுப்பவர். தன்னால் இயன்ற சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே நற்பெயர் பெற்றவர். இவர் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் தன்னை இணைத்துக் கொண்டது திருச்சி மாநகர அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்