திருச்சி பிளாசம்ஸ் ஹோட்டலின் அடுத்த படைப்பாக, சாமி குரூப்ஸ் சார்பில், விமான நிலையம் அருகே ‘5 ஸ்டார் ஹோட்டல்’ கட்டுமான பணி துவக்கம்…!
தமிழ்நாட்டின் மைய பகுதியாக திருச்சி அமைந்துள்ளது. சென்னை, நெல்லை உட்பட எந்த மாவட்டமாக இருந்தாலும் திருச்சியை 5 மணி நேரத்தில் வந்தடைந்து விடலாம். இதனால் தான் அரசியல் கட்சி தலைவர்கள் திருச்சியில் மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துகின்றனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரின் கனவு. அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகின்றன. திருச்சியில் விரிவு படுத்தப்பட்ட பன்னாட்டு விமான நிலையம், விசாலமான ரயில் நிலையம், விமான நிலையத்திற்கு இணையாக பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் போன்றவை அமைந்துள்ளன. அதேபோல பன்னாட்டு வணிக நிறுவனங்கள், ஐடி கம்பெனிகள் போன்றவை அமைந்துள்ளன. தற்போது திருச்சியில் பிரபலமான ஹோட்டல்களும் சர்வதேச தரத்திற்கு இணையாக கட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் திருச்சி சாமி குரூப்ஸ் சார்பில் கட்டப்பட்டு வரும் 5 ஸ்டார் ஹோட்டல் ஆகும். திருச்சி பிளாசம்ஸ் ஹோட்டலின் அடுத்த படைப்பாக விமான நிலையம் அருகே மொத்தம் 3.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த ஹோட்டல் சர்வதேச தரத்தில் அமைகிறது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கன்வென்ஷன் சென்டர், 125 அறைகள், ரெஸ்டாரன்ட், பார், நீச்சல் குளம், ஸ்பா போன்ற வசதிகளுடன் இந்த ஓட்டல் மிக பிரம்மாண்டமாக அமைகிறது. திருச்சி சாமி குரூப்ஸ் கட்டுமான துறையில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஆகும். ஏற்கனவே இந்த நிறுவனம் சார்பில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments are closed.