கடைவீதிகளில் சிறு, குறு வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் முப்பெரும் விழா மாநில இணைச்செயலாளர் என்.டி.கந்தன் தலைமையில் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் முகமது சபி வரவேற்றார். திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது புதிய நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார். முடிவில் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் சேட் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்களாக என்.டி.கந்தன், சாகுல் ஹமீது, சரவணன், மாநில இணைச் செயலாளர்களாக மாரி என்கிற பத்மநாதன், சபி அகமது, நிரஞ்சன்,மாவட்டத் துணைத் தலைவர்களாக அஜந்தா ரமேஷ், பஜார் மைதீன், முருகானந்தம், முரளி முகமது, மாவட்ட இணை செயலாளர்களாக சந்தோஷ் கண்ணன், மேகநாதன், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் மாநகராட்சியால் அனைத்து வணிகர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள டி.என்.ஓ. உரிமத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டுள்ள கூடுதல் தொழில் வரியை உடனடியாக குறைக்க வேண்டும். மாநகராட்சியால் புதிதாக கட்டப்படும் வணிக வளாகங்களில் முறையாக பல ஆண்டுகளாக வரி செலுத்துவரும் வணிகர்களுக்கு முன்னுரிமை அளித்து கடையை ஒதுக்கி கொடுத்தபின், இதர நபர்களுக்கு டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முக்கியமான கடைவீதிகளில் இயங்கக்கூடிய சிறு, குறு வணிகர்களை அப்புறப்படுத்த கூடாது. தொழிலாளர் நலத்துறை மூலமாக எடை கற்கள் தராசு மீது சுமத்தப்பட இருக்கும் கூடுதல் வரியை குறைக்க வேண்டும். தமிழக அரசு அந்நிய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்காமல் உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.