Rock Fort Times
Online News

கார்கில் போரில் வீரமரணம்: திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபிக்கு ராணுவத்தினர், அரசு அதிகாரிகள் மலர்தூவி மரியாதை…!

1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது யுத்தகளத்தில் எதிரிகளின் 2 முகாம்களை ஏவுகணையால் தாக்கி அழித்ததோடு, எதிரிகளை
சுட்டு வீழ்த்தி வீர மரணம் அடைந்தார், திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன். அவரது 27வது ஆண்டு நினைவுதினம் இன்று( மே 29) அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவுதினத்தையொட்டியும், கார்கில் போரில் உயிர்நீத்த இதர வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவுகூறும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும், மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ராணுவ அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மேஜர் சரவணன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்