கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கிராமத்தில் மே 21ம் தேதி கடைக்கு சென்ற 10 வயது சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்பட்டது. அதனால், பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, மாயமான சிறுமி உடலில் காயங்களுடன் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே, போலீசாரின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சிறுமியை கடத்தி, கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Comments are closed.