Rock Fort Times
Online News

அதிமுகவில் பரபரப்பு: 30 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்னை தலைமைச் செயலகம் சென்றார் , சி.வி.சண்முகம்…!

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிலையில், 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று( மே 11) காலை தொடங்கியது. அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு குழுவாகவும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்காததாலும், தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும் அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இதுவரை 17 எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். அதில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை சட்டமன்றக் குழு அ.தி.மு.க. தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்படுவார் என 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை அளிக்க உள்ளதாகவும், இதற்காக சி. வி.சண்முகம் தலைமையில் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை தலைமைச் செயலகத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இ.பி.எஸ்க்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்த நிலையில், வேலுமணிக்கு ஆதரவாக 30 பேர் மனு அளிக்க உள்ளதால் அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்