தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தநிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் இன்று( மே 6) தனியாக ஒரு ஒரு சில அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ.. பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு கேபி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது. அதிமுக பெரிய இயக்கம் என்றும், தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது’ என்றும் தெரிவித்தார்.

Comments are closed.