தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.23) விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அதிக ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதிக வாக்குகள் பதிவானது மகிழ்ச்சியை கொடுத்தாலும், இளைஞர்களின் வாக்குகளால் பெரிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. இந்நிலையில் இன்று(ஏப்.24) அண்ணா அறிவாலயத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். பின்னர் அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த திமுக வேட்பாளர்களுடன் வாக்குப்பதிவு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.