திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது மகன் ஜவஹர்லால் நேரு. இவரும் அதிமுகவில் பயணித்து வருகிறார். கட்சிப் பணிகள் மற்றும் கழகம் அறிவிக்கும் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அ.இ.அ.தி.மு.கழக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக ஜவஹர்லால் நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.