நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளைய தினமான ஏப்ரல் 11-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதன்படி, லால்குடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாரிவள்ளலை ஆதரித்து மாலை 3 மணிக்கு லால்குடி ரவுண்டானாவிலும், தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் சி.கதிரவனை ஆதரித்து நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகில் மாலை 4 மணி அளவிலும், அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் வேட்பாளர் துரைராஜை ஆதரித்து திருவானைக்கோவில் நாலுகால் மண்டபம் அருகில் மாலை 4-30 மணி அளவிலும், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து தென்னூர் அரசமரம் அருகில் மாலை 5 மணி அளவிலும் ஆதரவு திரட்டுகிறார். இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் வைரமணி மற்றும் தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.