தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி மற்றும் ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர அரசியல் தலைவர்களின் பரப்புரை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிதா இணையதளம் மூலம் அனுமதி கோருபவர்களுக்கு உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சிறை கைதிகளில் எத்தனை பேர் வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்பது தொடர்பான விவரங்களை சேகரிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.