தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக விஜய் மதுரையில் இருந்து பிரசார வாகனம் மூலம் சாலை வழியாக காரைக்குடி செல்கிறார். இந்நிலையில், இன்று காலை விஜய் பிரசார வாகனத்தில் காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவரின் பிரசார வாகனத்தை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பைக்கில் பின்தொடர்ந்தனர். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்த இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இளைஞர்கள் சென்ற பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.