திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆர்.மனோகரன். இந்த தொகுதியில் முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். அந்த முத்துராஜா இனத்தை கடந்த காலங்களில் பலமுறை இழித்தும், பழித்தும் பலமுறை பேசிய, ஆர்.மனோகரனுக்கு திடீரென வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முத்துராஜா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், வேட்பாளர் ஆர்.மனோகரனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்து வராது. அதேபோல டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த இவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டதால் உண்மையான இரட்டை இலை கட்சியினரும் ஆர்.மனோகரனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. திமுகவில் உள்ள அதிருப்தி கட்சிக்காரர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் ஆர்.மனோகரனின் தரப்பினர், ஆளுக்கு தகுந்தவாறு கரன்சி கட்டுகளை சத்தமில்லாமல் ஒப்படைத்து வருகிறார்களாம். எனவே இந்த முறை நான் தான் எம்எல்ஏ என்கிற ரேஞ்சுக்கு ஶ்ரீரங்கம் தொகுதி முழுவதும் ‘பில்டப்’ கொடுத்து வருகிறார் ஆர்.மனோகரன். ஆனால், உள்ளுக்குள் தோல்வி பயம் அவருக்கு வந்து, வந்து போகிறதாம். இதனால் அவர், தான் வெற்றி பெறுவதற்காக மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோப்பில் 3 ஆட்டை வெட்டி ரத்தம் சொட்ட, சொட்ட மிருக பலி கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக கிராம தெய்வங்களுக்கும், குலதெய்வங்களுக்கும் மிருகங்களை பலி கொடுத்து விட்டு அதனை சமைத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊர்காரர்களுக்கும் உணவாக வழங்குவது தான் வழக்கம். ஆனால், வேட்பாளர் ஆர்.மனோகரன் அப்படி செய்யாமல் கட்சி நிர்வாகிகள் யாரையும் அழைக்காமல் தன்னிச்சையாக மர்மமான முறையில் மிருக பலி கொடுத்திருக்கிறார். இவர் ஆட்டை துண்டு, துண்டாக வெட்டி தனது வெற்றிக்காக நாலாபுறமும் வீசி இருக்கிறார். இதனை யாரோ ஒருவர் பார்த்துவிட்டு தகவல் சொல்ல தொகுதி முழுவதும் இந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவி வருகிறது. தனது வெற்றிக்காக இதுவரை யாரும் இதுபோல செய்ததில்லை. முதல்முறையாக அதுவும் அதிமுக என்ற மாபெரும் கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற மிருக பலி கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.