தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி,,கேரளம் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று(ஏப்.9) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், புதுச்சேரியில் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 86.87 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 90 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவாகியுள்ளது. இது, புதுவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாகும். கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது புதுவையில் மொத்தம் 83.4 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.