திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் இடங்கள் அறிவிப்பு…!
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி,,லால்குடி, துறையூர் (தனி) ஆசிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் புலிவலம் ஓயாசிஸ் இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.